இதுவரை நான் சத்ரியன், இனிமேல் சாணக்கியன் - டி.ஆர்.

இதுவரை நான் சத்ரியன், இனிமேல் சாணக்கியன் - டி.ஆர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து, இதுவரை நான் சத்ரியன், இனிமேல் சாணக்கியன் என்று டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார்.
Published on

பிரபல இயக்குனரும் நடிகரும், இலட்சிய தி.மு.க கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர், தன்னுடைய அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ‘வரும் 28 ஆம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளேன். இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள். சிம்புவுக்கு நான் ஃபாதர் என்றால் சிம்பு ரசிகர்களுக்கு நான் காட் ஃபாதர்; சினிமாவை விட சவாலானது என்பதால் சிம்புவை அரசியலில் விட விரும்பவில்லை’ என்றார்.

ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் செய்து வரும் நிலையில், டி.ராஜேந்தர் இப்படி கூறியிருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com