நாளை ‘துப்பறிவாளன்’ விஷாலின் சிறப்பு விருந்து

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் ‘துப்பறிவாளன்’ படத்தில் இருந்து சிறப்பு விருந்து ஒன்று அளிக்கப்படுகிறது.
நாளை ‘துப்பறிவாளன்’ விஷாலின் சிறப்பு விருந்து
Published on

விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தில் அனு இம்மானுவேல், வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதையாக `துப்பறிவாளன்' உருவாகி வருகிறது. படத்தில் அறிவுப் பூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், இதோடு ஒரு மெல்லிய காதல் இருக்கும் என்று படத்தின் இயக்குநர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.

அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே படத்தில் இருந்து ஒரு பாடல் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், விஷால் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக நாளை படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com