மிஷன் இம்பாசிபிள் 6 - டாம் குரூஸ் முக்கிய அறிவிப்பு

மிஷன் இம்பாசிபிள் படத்தின் 5 பாகங்கள் இதுவரை வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், விறுவிறுப்பாக உருவாகி வந்த மிஷன் இம்பாசிபிள் 6-வது பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக டாம் குரூஸ் தெரிவித்துள்ளார். #MissionImpossible6
மிஷன் இம்பாசிபிள் 6 - டாம் குரூஸ் முக்கிய அறிவிப்பு
Published on

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். இவர் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 6-வது பாகத்தில் நடித்து வருகிறார். கிறிஸ்டோபர் மிக்குவாரி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் முடிந்துவிட்டதாக டாம் குரூஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சுமார் ஒரு மாதம் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், நேற்று கடைசி நாள் படப்பிடிப்பின் போது ஒரு மாபெரும் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் டாம் குரூஸ், 25,000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு சண்டை செய்யும்படியான காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. 

இந்த படத்தில் டாம் குரூஸ் உடன் ரெபக்கா பெர்கூசன், சிமான் பெக், விங் ராம்ஸ், மிச்செல் மோனகான், அலெக் பால்டுவின், சீன் ஹாரிஸ், ஹென்றி காவில், வானசா கிர்பி, சியான் புரூக், ஏஞ்சலா பாசட், வெஸ் பென்ட்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஜூலை 27-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #MissionImpossible6

X

Maalai Malar
www.maalaimalar.com