சுவாதியிடம் கவனமாக இருக்க வேண்டும்: அஸ்வின்

நடிக்கும் போது சுவாதியிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று நடிகர் அஸ்வின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள தகவல்களை விரிவாக கீழே பார்ப்போம்.
சுவாதியிடம் கவனமாக இருக்க வேண்டும்: அஸ்வின்
Published on

‘‘கல்லூரி முடித்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் ஒரு இளைஞனை, அந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் பாதிக்கிறது. அது எந்த மாதிரி பிரச்சினையை சந்திக்க வைக்கிறது என்பது தான் ‘திரி’ படத்தில் என் பாத்திரம். இது அப்பா மகன் தொடர்பான கதை. எனது அப்பாவாக ஜெயபிரகாஷ் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தில் சுவாதி என்னுடன் நடிக்கிறார். அவர் எப்போதுமே துறுதுறு என்று இருப்பார். அவருடன் சேர்ந்து நடிக்கும் போது உஷாராக இருக்க வேண்டும். சின்னச்சின்ன வி‌ஷயங்களைக்கூட அழகாக வெளிப்படுத்துவார். எனவே, அவருடன் நடிப்பவர்கள் கவனமாக இல்லாவிட்டால் நடிப்பில் நம்மையும் மிஞ்சி மொத்த ‘ஸ்கோரை’யும் அவரே தட்டிச் சென்றுவிடுவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com