`அவதார்' படத்தின் மூலம் மனதை கொள்ளையடிக்க வருகிறார் `டைட்டானிக்' ரோஸ்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகும் `அவதார்' படத்தின் அடுத்த பாகங்களில் நடிக்க `டைட்டானிக்' படத்தில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கேட் வின்ஸ்லெட் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
`அவதார்' படத்தின் மூலம் மனதை கொள்ளையடிக்க வருகிறார் `டைட்டானிக்' ரோஸ்
Published on

வருகிற டிசம்பர் 2020-ல் அவதார் படத்தின் அடுத்த பாகமாக 'அவதார்-2' வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், படத்தை ரிலீஸ் செய்வதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார்' உலகம்) தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படுகின்றன.

ஏற்கனவே அவதார் படத்தில் சாம் வொர்த்திங்டன், ஃஜோ சால்டனா, ஜோயல் டேவிட் மூர், சிகோர்னி வேவர், சிசிஎச் பவுண்டர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்ட்டிஸ் என பலரும் இருக்கும் நிலையில், `டைட்டானிக்' படத்தின் மூலம் உலக ரசிகர்களின் உள்ளத்தின் கவர்ந்த டைட்டானிக் ரோஸ் எனப்படும் கேட் வின்ஸ்லெட் `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com