தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி

சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான `டிக் டிக் டிக்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
Published on

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'.

சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். 

ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com