துப்பறிவாளன்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா இணைந்து நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படத்தின் முன்னோட்டம்.
துப்பறிவாளன்
Published on

இசை- அருள் கொரோல்லி, ஒளிப்பதிவு - கார்த்திக் வெங்கட்ராமன், படத்தொகுப்பு - அருண், இயக்கம் - மிஷ்கின்.

படம் பற்றி இயக்குநர் மிஷ்கின் கூறும் போது...

“தற்போது உருவாகிவரும் ‘துப்பறிவாளன்’ படம் ஒரு தனியார் நிறுவன துப்பறியும் நிபுணர் மற்றும் அவர் துப்பறியும் வி‌ஷயங்கள் பற்றி பேசும் படம்.

ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதை. தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை. ‘துப்பறிவாளன்’ நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்.

விஷால் இதில் ‘கணியன் பூங்குன்றன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய கவிஞர் பெயர். இதில் விஷாலுக்கு மிகவும் பலமான கதாபாத்திரம். படத்தில் விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், இதோடு இணைந்து ஒரு மெல்லிய காதல். இது தான் துப்பறிவாளன் ஸ்பெ‌ஷல். தெலுங்கில் பிரபலமான அனு இமானுவேல் இதில் நாயகியாக அறிமுகமாகிறார்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com