துலாம்

ராஜ நாக ஜோதி இயக்கத்தில் போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் ‘துலாம்’ படத்தின் முன்னோட்டம்.
துலாம்
Published on

வி மூவிஸ் சார்பில் விஜய் விகாஷ் தயாரித்துள்ள படம் ‘துலாம்’.

இதில் கதாநாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்கிறார். நாயகியாக டெபிலினா சாக்கி நடிக்கிறார். இவர்களுடன் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங், மோனா பிந்ரே, சிவா நடிக்கிறார்கள். முக்கிய வில்லன் பாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் விஜய் விகாஷ் நடிக்கிறார். 2 பாடல்களை எழுதியுள்ள இவர் ஒரு பாடலை பாடி, பாடகராகவும் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

ஒளிப்பதிவு - கொளஞ்சி குமார், எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், நடனம் - ‌ஷங்கர், ஸ்டண்ட் - ரமேஷ், கலை - ஜெயவர்மா, தயாரிப்பு - விஜய் விகாஷ், இயக்கம் - ராஜ நாக ஜோதி. படம் பற்றி கூறிய அவர்....

“இது போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும், மனசாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையும் விவரிக்கும் படம்.

இதில் கானா பாலா ஒரு பாடலை பாடி நடித்திருக்கிறார். நா.முத்துக்குமார் கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்தில் இடம் பெற்று இருக்கிறது. படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, ஊட்டியில் நடந்து முடிந்துள்ளது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘துலாம்’ ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com