நெருக்கமாக இருந்தவர்கள் தூரமாக சென்றுவிட்டனர்: தினேஷ்

என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தூரமாக சென்றுவிட்டனர் என்று அட்டக்கத்தி தினேஷ், உள்குத்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
நெருக்கமாக இருந்தவர்கள் தூரமாக சென்றுவிட்டனர்: தினேஷ்
Published on

தினேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘உள்குத்து’. இதில் இவருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் பி.கே.பிலிம் பேக்டரி ஜி.விட்டல் குமார், இயக்குநர் கார்த்திக் ராஜு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா, நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் தினேஷ் பேசும்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுதந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com