`திருமணம் எனும் நிக்காஹ்' பட இயக்குநரின் அடுத்த அறிவிப்பு

`திருமணம் எனும் நிக்காஹ்' படத்தை இயக்கிய அனிஷ், 2 வருடங்களுக்கு பிறகு த்ரில்லர் கதை ஒன்றை இயக்கவிருக்கிறார்.
`திருமணம் எனும் நிக்காஹ்' பட இயக்குநரின் அடுத்த அறிவிப்பு
Published on

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய இந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் அனிஷ் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். உலக புகழ் பெற்ற காவியத்தையும், ஒரு உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்ட கதையை அனிஷ் இயக்கவிருக்கும் இப்படம் முழு த்ரில்லராக உருவாக இருக்கிறது.

கன்னடத்தில் பிரபலமான `லூசியா' பட புகழ் நடிகர் சதீஷ் நின்சாம் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

`ரௌத்திரம்', `ஆண்டவன் கட்டளை', `96' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த என்.ஷண்முக சுந்தரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு பணிகளை கையாள்கிறார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com