தி லயன் கிங்

டிஸ்னி தயாரிப்பில் ஜான் பேவரூ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’ படத்தின் முன்னோட்டம்.
தி லயன் கிங் பட போஸ்டர்
தி லயன் கிங் பட போஸ்டர்
Published on

1994 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படம் `தி லயன் கிங்'. இந்தப் படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். 25 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் முறையில் தயாராகி வருகிறது. `அயர்ன் மேன்', `தி ஜங்கிள் புக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் பேவரூ இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

பிரமாண்டமான லைவ் ஆக்‌ஷன் படமான `தி லயன் கிங்' படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அரவிந்த்சாமி, சித்தார்த் ஆகியோர் குரல்கொடுக்கின்றனர். தவிர, ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, சிங்கம்புலி, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளனர். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். வரும் ஜுலை 19 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com