டிசம்பரில் வெளியாகிறது ஜீவாவின் தகப்பன்

அப்பா – மகன் இடையேயான ஆழமான பாசம் மற்றும் உறவை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
டிசம்பரில் வெளியாகிறது ஜீவாவின் தகப்பன்
Published on: 

நடிகர் ஜீவா நடித்துள்ள தகப்பன் திரைப்படம் 2026 டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிடா படத்தை இயக்கிய ரா. வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.கருடன், மாமன்போன்ற படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் இடையேயான ஆழமான பாசம் மற்றும் உறவை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

ஜீவாவுடன் இணைந்து ரஜிஷா விஜயன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் குழந்தை நட்சத்திரம் கேசவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்

படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் 40 நாட்களில் மிகவும் விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நடிகர் ஜீவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com