தலைவி படத்துக்கு சிக்கல்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘தலைவி’ படத்திற்கு ஜெ.தீபாவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜெ.தீபா
ஜெ.தீபா
Published on

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படம் இந்தியிலும் உருவாகிறது. இதேபோல் குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். 

இதனிடையே, தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தடை கோரி உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com