`தானா சேர்ந்த கூட்டம்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படக்குழுவில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
Published on

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் வெளிநாட்டு உரிமையை டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் அதிக தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com