காமெடி நடிகர் விஜய் சாய் மரணம்

தெலுங்கு சினிமாவின் காமெடி நடிகர் விஜய் சாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
காமெடி நடிகர் விஜய் சாய் மரணம்
Published on

தெலுங்கு நடிகர் விஜய் சாய் (வயது 35) நேற்று மரணம் அடைந்தார். தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் யூசுப்குடா பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின் விசிறியில் தூக்கில் தொங்கியநிலையில் அவர் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மரணம் அடைவதற்கு முன்பு, அவர் பதிவு செய்ததாக கூறப்படும் வீடியோ காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக, விஜய் சாய், தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் மீது அவருடைய மனைவி புகார் கொடுத்த நிலையில், விஜய் சாய் இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2001-ம் ஆண்டு, சினிமாவில் அறிமுகம் ஆன விஜய் சாய், ‘பொம்மரிலு’ உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com