விக்ரம் படம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

‘தூங்காவனம்’ படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக அந்த படம் குறித்து பரவிய வதந்திக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளனர். #Vikaram #AksharaHaasan
விக்ரம் படம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு
Published on

ராஜேஷ் எம்.செல்வா படத்தில், விக்ரம் நடிப்பது உண்மை. அவருடன், கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிப்பதும் உண்மை. ஆனால், அவர் விக்ரம் ஜோடி அல்ல. அக்‌ஷராஹாசன், ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் நடிக்கும் இரண்டாவது படம், இது.

அக்‌ஷராஹாசன் ஏற்கனவே அஜித்தின் ‘விவேகம்’ படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அதுபோன்ற ஒரு முக்கிய வேடத்தில், ராஜேஷ் எம்.செல்வா டைரக்‌ஷனில் நடிக்கிறார்.

ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் கம்ஹாசன்  மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். #Vikram

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com