ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்

நாயகன் சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு, 'தமிழ்ப்படம் 2.O' படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
Published on

கடந்த 2010ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப்படம்’ பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்படங்களையும், நடிகர்களையும் கிண்டல் செய்து நகைச்சுவை காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். அண்மையில் ’தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ’2.0’ . இந்த தலைப்பை ’தமிழ்ப்படம்’ இரண்டாம் பாகத்தில் சேர்த்து அட்ராசிட்டி செய்துள்ளார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். படத்தின் முதல் போஸ்டரில் டிசம்பர் 11ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் அதற்கு அடுத்த நாளே (26.05.2018) தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் ’Official Piracy Partner - தமிழ் ராக்கர்ஸ்’ என்று குறிப்பிட்டிருந்தனர். 

தமிழ் ராக்கர்ஸ், 2.0.. இவற்றை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டு அரசியலை கிண்டலடிக்கும் வகையில் மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளது ’தமிழ்படம் 2.0’ படக்குழு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருப்பது போன்ற புகைப்படம் தமிழகமெங்கும் பிரசித்தி பெற்றது. அதே போன்று சிவா அமர்ந்திருப்பது போன்று இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com