மலேசியாவுக்கு சென்ற தமிழ்ப்படம்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழ்ப்படம் 2.O’, அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மலேசியா செல்கிறது. #TP2Point0
மலேசியாவுக்கு சென்ற தமிழ்ப்படம்
Published on

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ்ப்படம்'. சிவா, திஷா பாண்டே உள்பட பலரும் நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. 

முதல் மற்றும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மலேசியா சென்றுள்ளது. அங்கு பாடல் காட்சிகள் மற்றும் சில காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சிவா - ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் திஷா பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த பட போஸ்டர்களுக்கு சமூக வலைகளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் வருகிற ஜூலையில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

`விக்ரம் வேதா' படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்து வருகிறார். அவர் இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com