பிரபாஸின் ‘சாஹோ’ படத்தில் இணைந்த தமிழ் நடிகர்

`பாகுபலி' படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸ் அடுத்ததாக நடித்து வரும் சாஹோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகி உள்ளார்.
பிரபாஸின் ‘சாஹோ’ படத்தில் இணைந்த தமிழ் நடிகர்
Published on

ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார்.
இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜாக்கி ஷராப், சங்கி பாண்டே, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அருண் விஜய் ‘சாஹோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதும் உறுதியாகி இருக்கிறது. அதனை அருண் விஜய்யே அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த படம் அருண் விஜய்க்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com