குறும்பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த விஷால்

நடிகர் விஷாலின் 31-வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஷால்
விஷால்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி உள்ளார். 

விஷாலை வைத்து இவர் இயக்கும் படம் ‘அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன்’ என்ற கதை கருவில் தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும் இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com