விஷால்
விஷால்

விஷாலுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணாவும், நந்தாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

பாபுராஜ்

இந்நிலையில், இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஏற்கனவே தமிழில் அஜித்தின் ஜனா, விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com