மாஸ்டர் விஜய் பாணியில் நடிக்கும் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, புதிய படம் ஒன்றில் மாஸ்டர் விஜய் பாணியில் நடித்து உள்ளாராம்.
விஜய், விஜய் சேதுபதி
விஜய், விஜய் சேதுபதி
Published on

விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

அழகிய கண்ணே படப்பிடிப்பில் விஜய் சேதுபதி

கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அவர் மாஸ்டர் விஜய் பாணியில் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படமும் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com