கபிலனுக்கு போட்டியாக களமிறங்கிய வேம்புலி

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கபிலன் கதாபாத்திரத்தில் ஆர்யாவும், வேம்புலி கதாபாத்திரத்தில் ஜான் கொக்கேனும் நடித்திருந்தனர்.
ஜான்  கொக்கேன் - ஆர்யா
ஜான் கொக்கேன் - ஆர்யா
Published on

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

ஆர்யா - பசுபதி

தற்போது, சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இதில் ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதியும், கபிலனாக நடித்துள்ள ஆர்யாவும் சைக்கிளில் போகும் காட்சியை அடிப்படையாக கொண்டு ஏராளமான மீம்ஸ் போடப்பட்டு வருகின்றன.

ஜான் கொக்கேன் - ஜி.எம்.சுந்தர்

இந்நிலையில், வேம்புலியாக நடித்த ஜான் கொக்கேன், தனது வாத்தியாராக நடித்த ஜி.எம்.சுந்தரை சைக்கிளில் அழைத்து செல்வது போல் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com