வாலி படத்தின் இந்தி ரீமேக்... எஸ்.ஜே.சூர்யா வழக்கு?

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வாலி படத்தின் இந்தி ரீமேக் உருவாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
சிம்ரன் - அஜித்
சிம்ரன் - அஜித்
Published on

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வாலி. இதில் அஜித் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு வேடங்களில் நடித்து இருந்தார். அவருக்கு திருப்பு முனை படமாக வாலி அமைந்தது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருப்பதாகவும் ரீமேக் பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. 

எஸ்.ஜே.சூர்யா

வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. வாலி இந்தி ரீமேக்கில் அஜித்குமார் நடிக்காத பட்சத்தில் தானே நடிக்க எஸ்.ஜே.சூர்யா விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும், ரீமேக் உரிமை திரைக்கதை எழுதியவருக்கே உண்டு என்ற சமீபத்திய ஆரண்ய காண்டம் பட வழக்கில் வெளியான கோர்ட்டு தீர்ப்பை சாதகமாக எடுத்துக்கொண்டு திரைக்கதை தன்னுடையது என்பதால் வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com