உதயநிதி நடித்த படம் 9 விருதுகளுக்கு பரிந்துரை

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் திரைப்பட விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

டபுள் மீனீங் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் ‘சைக்கோ’. இப்படம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான சைமா 2020 (SIIMA 2020) திரை விழாவில், 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த இயக்கம் (மிஷ்கின்), முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் - உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் - உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் (Double Meaning Productions), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்). ராஜ்குமார் பிச்சுமணி சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் சைக்கோ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2020) 9 வது பதிப்பு செப்டம்பர் 18 & 19 தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com