யோகிபாபு, சுனைனா இணைந்து நடித்துள்ள ‘ட்ரிப்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு, சுனைனா நடித்துள்ள ட்ரிப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனைனா, யோகிபாபு
சுனைனா, யோகிபாபு
Published on

யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடித்துள்ள சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படம் ட்ரிப். பிரவீன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக சுனைனா நடித்துள்ளார். சாம் ஆண்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு உதய சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ட்ரிப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com