புது ஹீரோ கூட நடிக்க மாட்டேன்னு நிறைய பேர் சொன்னாங்க - ‘ட்ரிப்’ பட நடிகர் பிரவீன்

புது ஹீரோ கூட நடிக்க மாட்டேன்னு நிறைய பேர் சொன்னதாக ட்ரிப் பட நடிகர் பிரவீன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரவீன்
பிரவீன்
Published on

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ட்ரிப். அறிமுக நாயகன் பிரவீன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயின்கள் நடிக்க மறுத்தது குறித்து நாயகன் பிரவீன் கூறியதாவது: “3 வருடங்களுக்கு முன் ஒரு உதவி இயக்குனர் மூலமாகத் தான் எனக்கு ட்ரிப் பட வாய்ப்பு கிடைத்தது. திரிஷா, நயன்தாரா, சமந்தா தவிர எல்லா ஹீரோயின்களிடமும் கதை சொல்லிட்டோம். 

யாரும் நடிக்க சம்மதிக்கல. புது ஹீரோ கூட நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லி நடிக்க மறுத்தார்கள். அந்த சமயத்தில் கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப் போனதால் நடிகை சுனைனா நடிக்க ஒத்துக்கொண்டார். எனது முதல் படத்தில் சுனைனா ஹீரோயினாக நடித்ததை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்” என பிரவீன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com