தமிழில் ரீமேக்காகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ - பிரபல இயக்குனர் இயக்குகிறார்

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.
தி கிரேட் இந்தியன் கிச்சன் பட போஸ்டர்
தி கிரேட் இந்தியன் கிச்சன் பட போஸ்டர்
Published on

மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்க உள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் காரைக்குடியில் தொடங்க உள்ளது.

ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் எடுக்கப்படுவதால், தமிழ்-தெலுங்கில் புகழ்பெற்ற நடிகர், நடிகையை இதில் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் ரசிகர்களின் ரசனை மற்றும் சுவைக்கு ஏற்றார் போல் இப்படத்தை அழகாக வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர் இப்படத்திற்கான வசனத்தை எழுத உள்ளார். 

இயக்குனர் கண்ணன் ஏற்கனவே தமிழில் சேட்டை, இவன் தந்திரன், பூமராங், வந்தான் வென்றான், ஜெயம் கொண்டான், பிஸ்கோத் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com