முதல் கட்டத்தை தாண்டிய தர்ஷன் - லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் முதல் கட்டத்தை முடித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறார்கள்.
லாஸ்லியா - தர்ஷன்
லாஸ்லியா - தர்ஷன்
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் தர்ஷன் - லாஸ்லியா. இவர்கள் இருவரும் இணைந்து ‘குகூள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, யூடியூப் பிரபலம் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி வருகின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com