கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன்
கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன்
Published on

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இந்நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில், தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தர்ஷன் நடிக்க உள்ளார். 

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம். மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com