வடிவேலு இன்றி தயாராகும் ‘சுந்தரா டிராவல்ஸ் 2’... நடிக்கப்போவது யார் தெரியுமா?

முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தரா டிராவல்ஸ் படத்தின் போஸ்டர், வடிவேலு
சுந்தரா டிராவல்ஸ் படத்தின் போஸ்டர், வடிவேலு
Published on

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. இதுதவிர அஜித்குமாரின் பில்லா, கமலின் விஸ்வரூபம், தனுஷின் வேலை இல்லா பட்டதாரி, விஷாலின் சண்டக்கோழி, சுந்தர் சி-யின் அரண்மனை, விக்ரமின் சாமி  உள்ளிட்ட படங்களும் 2 பாகங்களாக வெளிவந்துள்ளன. குறிப்பாக சூர்யாவின் சிங்கம் மற்றும் லாரன்ஸின் காஞ்சனா ஆகிய படங்களுக்கு வரவேற்பு இருந்ததால், தொடர்ச்சியாக 3 பாகங்கள் வெளிவந்தன. 

யோகிபாபு, கருணாகரன்

இந்நிலையில், முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், முரளி கதாபாத்திரத்தில் கருணாகரனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தை போன்று இதுவும் நகைச்சுவை நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com