ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
சிவக்குமாரின் சபதம் படத்தின் போஸ்டர்
சிவக்குமாரின் சபதம் படத்தின் போஸ்டர்
Published on

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இயக்குனராக அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள புதிய படம் ‘சிவக்குமாரின் சபதம்’. இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளதோடு இசையமைத்தும் உள்ளார்.

இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடித்துள்ளார். அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தீபக் எஸ்.துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சிவக்குமாரின் சபதம் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், சிவக்குமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com