நடிகராக அறிமுகமாகும் சிவாஜி பேரன்.... பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கிறார்

நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் இளைய மகனான தர்ஷன், பிரபல இயக்குனரின் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளாராம்.
சிவாஜி, தர்ஷன்
சிவாஜி, தர்ஷன்
Published on

கூடல் நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதையடுத்து அவர் விஜய்சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து கவனம் பெற்றார். 

அடுத்ததாக இவர் இயக்கி உள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த இரு படங்களிலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். சிவாஜியின் மகன் ராம்குமாரின் இளைய மகனான தர்ஷன், கூத்துப் பட்டறையில் முறையாக நடிப்பு பயிற்சி பயின்றுள்ளாராம். 

ஏற்கனவே சிவாஜி குடும்பத்தில் இருந்து பிரபு, ராம்குமார், துஷ்யந்த், விக்ரம் பிரபு ஆகியோர் நடிக்க வந்துள்ள நிலையில், தற்போது தர்ஷனும் நடிகராக களமிறங்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com