தங்கை அக்‌ஷரா ஹாசன் இயக்கத்தில் நடிக்க ரெடி - சுருதிஹாசன்

லாபம் படத்தில் நடித்தபோது மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் கம்யூனிசத்தை பற்றி நிறைய கற்றுக் கொண்டதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன்
சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவரது நடிப்பில் இந்தாண்டு வெளியான கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை சுருதிஹாசன் இணையதளம் வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது : “லாபம் படத்தில் நடித்தபோது மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் கம்யூனிசத்தை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். லாபம் படத்தில் நடித்தது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. தங்கை அக்‌ஷராவுக்கு படம் இயக்குவதில் அதிக ஆர்வம். எதிர்காலத்தில் அவர் படம் இயக்கினால் எனக்கு ஏற்ற கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். அப்பா தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வரவில்லை”.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com