பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் - ராம்சரண் படம்

ஷங்கர் பட பூஜையில், சிறப்பு விருந்தினர்களாக சிரஞ்சீவி, ரன்வீர் சிங், ராஜமவுலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஷங்கர் பட பூஜையில் எடுத்த புகைப்படம்
ஷங்கர் பட பூஜையில் எடுத்த புகைப்படம்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஷங்கர் பட பூஜையில் எடுத்த புகைப்படம்

இப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இன்று நடைபெற்ற பூஜையில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவி, ரன்வீர் சிங், பிரபல இயக்குனர்கள் ராஜமவுலி, லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. முதலில் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். இதற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com