அது வதந்தி... யாரும் நம்பாதீங்க... ஷகிலா வீடியோ

பெரியத்திரை மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிசியாக நடித்து வரும் ஷகிலாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஷகிலா
ஷகிலா
Published on

மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் மற்றும் ஒரு சில படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஷகிலாவின் உடல் நலம் குறித்து செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தன்னைப்பற்றி வெளியான ஒரு செய்தி முற்றிலும் வதந்தி. நான் தற்போது மகிழ்ச்சியாகவும் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன். அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மேலும் என்னைப் பற்றிய வதந்தி பரவிய உடன் ஏராளமானோர் தனக்கு போன் செய்து நலம் விசாரித்த அனைவருக்கும் தனது நன்றி. குறிப்பாக இந்த அன்பை தெரிந்து கொள்ள வைத்த வதந்தியை பரப்பியவர்களுக்கும் தனது நன்றி’ என்றார். ஷகிலாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com