‘சாணிக் காயிதம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார்.
சாணிக் காயிதம் படக்குழு
சாணிக் காயிதம் படக்குழு
Published on

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சாணிக் காயிதம் படத்தின் போஸ்டர்

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து செல்வராகவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்ன ஒரு அற்புதமான பயணம், நிறைய கற்றுக் கொண்டேன், நட்சத்திரங்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இப்படத்தின் பின்னணி பணிகள் தொடங்க உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com