9 ஆண்டுகளுக்கு பின் சீனு ராமசாமி படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற நடிகை

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘இடிமுழக்கம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சீனு ராமசாமி
சீனு ராமசாமி
Published on

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் நடைபெற்று வருகிறது. கிராமப்புற பின்னணியில் திகில் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடிக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன்

இந்நிலையில், ‘இடிமுழக்கம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சரண்யா பொன்வண்ணன் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு தாயாராக நடிக்கிறாராம். 

நடிகை சரண்யா பொன்வண்ணன் ஏற்கனவே சீனி ராமசாமி இயக்கத்தில் ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com