டிக்கிலோனா படத்தின் போஸ்டர்
டிக்கிலோனா படத்தின் போஸ்டர்

‘டிக்கிலோனா’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
Published on

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படம் ‘டிக்கிலோனா’. இப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் நடித்துள்ளார்கள். மேலும் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

டிக்கிலோனா படத்தின் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, டிக்கிலோனா படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com