நெற்றியில் குங்குமம்.... ரகசிய திருமணமா? - சனம் ஷெட்டி விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சனம் ஷெட்டி
சனம் ஷெட்டி
Published on

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை சனம் ஷெட்டி. இவரும் பிக்பாஸ் 3 போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்தனர். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு, இருவரிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் திருமணம் நின்றது. 

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெற்றி வகிடில் குங்குமம் வைத்து காணப்பட்ட சனம் ஷெட்டி, தற்போது நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னரும் சில சமயங்களில் அதுபோன்று காணப்படுகிறார்.

இதுப்பற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சனம் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சனம், எல்லாருமே இதே கேள்வியை தான் கேட்கிறார்கள். எனக்கு இப்போது வரை திருமணம் நடைபெறவில்லை. உங்கள் அனைவரது ஆசீர்வாதத்துடன் கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும். 

மேலும், எங்கள் வீட்டில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி மற்ற பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது வழக்கமான ஒன்று தான் என்று பதிலளித்த சனம், திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com