சமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பாஸ் பிரபலம்

அறிமுக இயக்குனர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி உள்ள 'யாவரும் வல்லவரே' படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி
Published on

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் கைவசம் 'ஆர்.ஆர்.ஆர்', 'இந்தியன் 2', 'தலைவி', 'எம்.ஜி.ஆர் மகன்', 'அந்தகன்', 'டான்', 'ரைட்டர்' என ஏராளமான படங்கள் உள்ளன. 

இந்நிலையில், அவர் நடிக்கும் மற்றொரு தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு 'யாவரும் வல்லவரே' என பெயரிபடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படம், நான்கு வெவ்வேறு கதைகளை இணைத்துச் சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாகியுள்ளது.

ரித்விகா, சமுத்திரக்கனி

இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ரித்விகா நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com