லாரன்ஸின் ‘ருத்ரன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
பிரியா பவானி சங்கர், லாரன்ஸ், கதிரேசன்
பிரியா பவானி சங்கர், லாரன்ஸ், கதிரேசன்
Published on

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன், இவர் அடுத்ததாக ருத்ரன் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குனர் கதிரேசன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com