லாரன்சுக்கு ஜோடியாகும் ‘இந்தியன் 2’ நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கும் ருத்ரன் படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக இந்தியன் 2 பட நடிகை நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லாரன்ஸ்
லாரன்ஸ்
Published on

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய காஞ்சனா படத்தின் 3 பாகங்களும் நல்ல வசூல் பார்த்தன. ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கும் படம் ‘ருத்ரன்’. இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், இதன்மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், ருத்ரன் படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை பிரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியா பவானி சங்கருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்த அறிவிப்பை ருத்ரன் படக்குழு வெளியிட்டுள்ளது. 

நடிகை பிரியா பவானி சங்கர், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, அதர்வாவின் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே, சிம்புவின் பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com