உலகளவில் 12 மொழிகளில் வெளியாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகளவில் 12 மொழிகளில் வெளியாக உள்ளதாம்.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்
Published on

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. 

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் மட்டுமல்லாது, ஆங்கிலம், கொரியன், துர்க்கிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய அந்நிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அவற்றோடு ஜப்பான் மற்றும் சீன மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். இதன்மூலம் ‘ஆர்ஆர்ஆர்’ படம் உலக அளவில் 12 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com