ரெட் சேன்டில்

அறிமுக இயக்குனர் குரு ராமானுஜம் இயக்கத்தில் வெற்றி, தியா மயூரி நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட் சேன்டில்’ படத்தின் முன்னோட்டம்.
ரெட் சேன்டில் படத்தின் போஸ்டர்
ரெட் சேன்டில் படத்தின் போஸ்டர்
Published on

வலுவான கதைக் களத்தோடு உருவாகும் படம் ‘ரெட் சேன்டில்’. இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் ‘ஜீவி’, ‘ 8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக தியா மயூரி நடிக்கிறார். வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். 

முக்கியமான வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வாந்த், மாரி விநோத், 'கர்ணன்' ஜானகி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

‘கழுகு’ சத்ய சிவாவிடம் பணியாற்றிய குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜெ.என்.சினிமா நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை  தயாரித்துள்ளார் பார்த்தசாரதி.

படம் குறித்து இயக்குநர் குருராமானுஜம் கூறியதாவது, “இது ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகும் படம். 2015-ல் நடந்த உண்மைச் சம்வத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களின் உயிர் போலீஸ் தோட்டக்களுக்கு இரையானது என்பது வரலாறு. 

உண்மையில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வறுமையை பயன்படுத்தி மூளைச் சலவை செய்து இத்தொழிலில் ஈடுபட வைப்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com