இரண்டு தோற்றத்தில் அசத்த வரும் ரம்யா நம்பீசன்

தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் ரம்யா நம்பீசன், நவரசா படத்தின் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
ரம்யா நம்பீசன்
ரம்யா நம்பீசன்
Published on

திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். விரைவில் வெளியாகவிருக்கும் "நவரசா" ஆந்தாலஜி படத்தில், லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். நவரசா திரைப்படம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்தும், பிரியதர்ஷன் இயக்கத்தில் பணியாற்றியது குறித்தும், நடிகை ரம்யா நம்பீசன் கூறும்போது, ‘எனது கதாப்பாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறியபோது, எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன்.

இயக்குனர் பிரியதர்ஷன் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக்கொண்டார். அவரால்தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. இயக்குனர் பிரியதர்ஷனுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com