சினிமாவில் எனக்கு புதிய அடையாளத்தை கொடுத்தார் - ரகுமான் நெகிழ்ச்சி

பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமான ரகுமான், கே.பாலசந்தர் பிறந்தநாளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரகுமான்
ரகுமான்
Published on

மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் 91-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு நடிகர் ரகுமான், அவருடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், என் வாழ்கையில் மறக்க முடியாத, நான் என்றும் வணங்கும் குருநாதருக்கு நிகரானவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள்.

ஒவ்வொரு நடிகனும் நடிகையும் அவரது படத்தில் முகம் காட்ட ஆசையுடன் காத்திருந்த காலத்தில், எனக்கு வரமாக அவரது புதுபுது அர்த்தங்கள் என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நான் தமிழ் சினிமாக்களில் நடித்திருந்தாலும் இந்த படம் எனக்கு தென்னிந்திய சினிமாவில் ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது. மேலும் என் சினிமா வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்பதில் நன்றியுடன் பெருமைப்படுகிறேன்.

கே.பாலசந்தர் - ரகுமான்

கே.பாலச்சந்தர் சாரின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்.,! அவருடைய எல்லா படங்களுமே காலத்தை வென்று நிற்பவை. இன்று வரைக்கும் தினமும் ரசிகர்களிடமிருந்து புது புது அர்த்தங்கள் படத்துக்கு பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. கே.பாலச்சந்தர் சார் நம்முடன் இல்லை என்றாலும் அவர் என்னை போன்ற கலைஞர்கள் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் என்றென்றும் வாழ்கிறார்’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com