‘கே.ஜி.எப். 2’ படத்திற்கு போட்டியாக களமிறங்கும் லாரன்ஸின் ‘ருத்ரன்’

பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ருத்ரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
கே.ஜி.எப். 2 மற்றும் ருத்ரன் படத்தின் போஸ்டர்
கே.ஜி.எப். 2 மற்றும் ருத்ரன் படத்தின் போஸ்டர்
Published on

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன், ‘ருத்ரன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

மேலும் பூர்ணிமா பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ருத்ரன் மற்றும் கே.ஜி.எப். 2 படத்தின் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ருத்ரன் படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கே.ஜி.எப். 2’ படமும் அன்றைய தினம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com