ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘ராதே ஷ்யாம்’ படக்குழு

‘ராதே ஷ்யாம்’ படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி, திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
பூஜா ஹெக்டே, பிரபாஸ்
பூஜா ஹெக்டே, பிரபாஸ்
Published on

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஜென்மாஷ்டமி தினமான இன்று ‘ராதே ஷ்யாம்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் தோற்றங்களுடன் கூடிய இந்த புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ராதே ஷ்யாம் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்

‘ராதே ஷ்யாம்’ படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி, பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com