அந்தாதூன் ரீமேக்கில் ராஷி கண்ணா

பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அந்தாதூன் படத்தின், ரீமேக்கில் ராஷி கண்ணா நடிக்க உள்ளாராம்.
ராஷி கண்ணா
ராஷி கண்ணா
Published on

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. 

இப்படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அதேபோல் இப்படம் மலையாளத்திலும் ரீமேக் ஆகிறது. ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் மலையாளத்தில் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும், இவர் ஏற்கனவே மோகன்லாலின் வில்லன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com